சன் T.V.யில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பப் படுகிறது.அம்பை என்ற ஒரு பெண் பாத்திரம்.நீதிகளையும்,அநீதிகளையும் எடுத்துரைக்கும் இதிகாசம்தான் பாரதம்.அந்தக் கால கட்டத்திலேயே பெண்ணுரிமை இப்பாத்திரத்தின் வாயிலாக பேசப்பட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.இப்பெயரை நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.ஆனால் இதன் தன்மையை,பார்க்கும் வாய்ப்பு தொடரில் கிடைத்துள்ளது.தான் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலாத சூழல்;அதனை எதிர்த்துப் போராடும் துணிவு;அப்படிப்பட்ட ஒரு கால,இட,வாழ்க்கை நிலையிலும் என்ன மாதிரியான மனநிலை!பாரதியார் கூட, தன், பாஞ்சாலி சபதத்தில்,இதிகாசத்திற்குப்,பிற்பட்ட காலப் போக்கில் தான்,திரௌபதியை,கணவனுக்கு எதிர்ப்பைக் காட்டும் பெண்ணாகப் படைத்திருப்பார்.ஆனால் இந்தப் பாத்திரம் முன் காலத்திலேயே முற்போக்குப் பெண்ணா என்று வியக்க வைக்கிறது.அரச குடும்பமாக இருந்தாலும்,சுய விருப்புடன் நடக்கும் [நியாயமான]பெண்ணை பெற்றவர்களும்,மற்றவர்களும் வெறுத்து ஒதுக்கும்,அந்தக் கால முறையை அறிகிறோம்.கொஞ்சம்,கொஞ்சமாக,பெண்கள் முன்னேற்றம் என்பது எத்தனைப் போராட்டங்களை எதிர் கொண்டதோ?பெற்றோர்களே கூட தங்கள் பெண்களுக்கே உரிமை வழங்க என்னென்ன அனுபவங்களை மேற்கொண்டிருப் பார்கள்?எத்தனை தலைமுறைகள் தாண்டி இருக்கும்!பெண்ணுரிமைக்கு வித்திட்டவன் பாரதி என்று நினைத்துப் பெருமிதப்பட்டுக்கொள்ளும் நிலையை மிஞ்சும் அளவுக்கு,எந்த அடித் தளமும்,துணையும் இல்லாமல் மகாபாரதக் கால 'அம்பை 'ஒரு உயர்ந்த பாத்திரம்தான்!
ஆனால் சன் டிவி எதையும் alter செய்யாமல் ஒளிபரப்பினால் சரி.
ReplyDelete