Saturday 24 January 2015

மாதொருபாகன் நாவலுக்கான சர்ச்சை ஒரு புறமிருக்கட்டும்.அந்த நாவலில் வரும் குறிப்பிடத் தக்க வரிகள் ஒரு வார இதழில் வந்திருந்தது.நாவல் ஆசிரியர் குறிப்பி ட் டிருப் பது போல் நடந் திருக்குமா ,இவ்வளவு வெளிப் படையாக எழுதப் பட்டிருக் கிறதே என்று வருந்தினேன்.சமீபத்தில் அம்மா வந்தாள் என்ற நாவலை,  வெகு நாட்களாகத் தேடி கிடைத்த மகிழ்வில் படித்தேன்.இப்படி எல்லாமா பெண்கள்,அதுவும் அம்மா இருப்பாளா என்று மனம் வெதும்பினேன் .அதுவும் உயரினத்தை சேர்ந்தவள் வேறு. ஆசிரியர் தான் நேரில் பார்த்த பெண்களின் வாழ்க்கை என்று வேறு எழுதி இருந்தார்.எனக்கு  வெறுப்பாகி விட்டது.மறைந்த சுஜாதா   அவர்கள் ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று எழுதினார்.நான் படித்த தில்லை.அது எப்படி இருக்குமோ?  
சமீபத்தில் 2வது முறை ஆதலினால் காதல் செய்வீர் திரைப்படத்தை பார்க்க நேரிட்டது.திருமணத் துக்கு முன் பெண் கருவுருவுவது இரண்டொரு நேரடி சம்பவங்களை கேள்விப் பட்டிருக்கிறேன்.அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள்.பெற்றோர்கள் வீதிக்கு வந்து அசிங்கப் படுத்தாமல்,அசிங்கப்படாமல் உரியவர்களுக்கே திருமணம் செய்த துண்டு.அவர்கள் இனத்தில் வேறு பட்டவர்கள் இல்லை.திரைப் படத்தில் கூறுவதுபோல் ஆசீர்வாதப் பிரட்சனை எல்லாம் வந்ததும் இல்லை.ஜாதகம்,ஜோசியம் என்ற எந்த இடையூறும் இருந்ததில்லை.நன்றாகத் தான் அவர்களின் வாழ்க்கையும் போய்க் கொண்டிருக் கிறது.அந்தத் திரைப் படக் குழந்தையை நினைத்துத் தான் நான் வருத்தப் பட்டேன்.புரிந்து கொள்ளும் ,  மன சாட்சி உடைய பெற்றோர்கள் இப்படியான இழி நிலையை உருவாக்காமல் இருக்கும்பட்சத்தில் ,உணர்ச்சி வசப்பட்டு தவறு செய்யும் இளம் பருவத்தினரை வாழ்வித்து நல்ல சமுதாயத்தை வுருவாக்கலாமே!