சென்ற வாரங்களில் விஸ்வரூபம் படம் பற்றிய செய்திகள்;சர்ச்சைகள்.நான் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே முஸ்லிம் பையன்,பெண்களுடன் பழகி இருக்கிறேன்.கல்லூரிக் காலங்களில் பெண் நண்பி இருந்திருக்கிறார்.முதுகலை வகுப்பில் ஒருவர்(பெயர் உமர் கதாப்)இருந்தார்.எல்லோரிடமும் இயல்பான நிலையில் தான் பழகி இருக்கிறோம்.இந்து,முஸ்லிம் என்ற எந்த வேறுபாடும் தெரியாது.பெயரில்மட்டும் தான் வேற்றுமை.மற்றபடிவீட்டுக்கு வருவது,பழகுவது,ஏன் பெற்றோர் கூட வேற்றுமை கற்பித்ததில்லை.ஆனால்பள்ளியில் ஒருநாள் ஆசிரியர் களாகிய நாங்கள்,'இந்தியாவின் monsester மும்பை,தமிழ்நாட்டின் monsester கோயம்புத்தூர்' என்றுசொல்லிக் கொண்டிருக்கும் பொழுது,இரண்டு இடங்களில் தான்,அடிக்கடி குண்டு வெடிப்பு நிகழும் என்று ஒரு ஆசிரியை வேடிக்கையாக நினைவு படுத்தினார்.நிகழ்த்தியவர்கள்,குறிப்பிட்ட ஒரு இயக்கம் சார்ந்தவர் களாக அல்லவா இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.அன்றாடம் பழகிக் கொண்டிருப் பவர்கள் வேறு,இவர்கள் வேறு என்று சாதாரணமாக நினைத்துக் கொள்வேன்.காந்தகார் விமானக் கடத்தல்,ஒரு தம்பதியருள் கணவனைக் கொன்றது,அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்,தாஜ் ஹோட்டல் தாக்குதல்,அரபு நாடுகளிலுள்ள தண்டனைச் சட்டங்கள்,சமீபத்தில் இளம்பெண்ணின் தலைத் துண்டிப்பு இவையெல்லாம் இடர்ப் பாடான ஒரு மனநிலையை என்னுள் தோற்றுவிக்கும்.மதன் எழுதிய 'வந்தார்கள் வென்றார்கள்'படித்ததன் பாதிப்பு,இப்படித் தான் போலுமிவர்களின் நீதி முறை என்று நினைத்துவிட்டு விடுவேன்.அதனால் இன்றளவும் இசுலாமிய மக்களுடன் பழக்கம் சாதாரண மாகத்தான் இருக்குமே தவிர ஒரு வேறுபாடும் தோன்றியதே இல்லை.இவ்வாறு வன்முறையில் ஈடுபடுபவர்களின் இனம் என்று சிறிதளவும் தோன்றவே தோன்றாது.அவர்களும் எந்த ஒரு மரியாதைக் குறைவாகவும் பேசியதே இல்லை.திரைப்படக் காட்சிகள் எப்படி இருக்குமோ நான் பார்க்கவில்லை.எத்தனையோ தி ரைப் படங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்திருக்கின்றன.(அரங்கேற்றம் திரைப்படம்)படம்,பாடம் கற்பிப் பதாக அமைவதுண்டு.ரசிகர்களின் மனநிலையைப் பொறுத்துத் தான் அவை அவ்வாறு ஏற்றுக் கொள்ளப் படும்.தற்பொழுது நடக்கும் செயல்களுக்கு ஏற்ற வகையில்தான் திரைக் கதைகளும்,காட்சிகளும் அமைகின்றனவோ?என்னவோ!'இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி'என்பார்கள்.இதற்கும் பொருந்துமோ?யாரோ ஓரிருவர் சில கொடூரங்களை செய்கிறார்கள் என்பதற்காக நாம் அந்த இனத்தவரையே இழிவாகப் பார்க்கிறோமா என்ன?இல்லையே!அப்படி இருக்கும் பொழுது ஏன் இந்த சர்ச்சை களும்,குழப்பமும் என்பது புரியவில்லை.இன்னும் வருங்காலங்களில் என்னென்ன வருமோ!
No comments:
Post a Comment