மணமாகி 6,7மாதங்கள் ஆன இணையருள்,அன்பு பற்றிய பேச்சு வந்தது.நான் கூறினேன்.'செம்புலப் பெயல் நீர் போல'மனமொ த் திருக்கவே ண்டும் என்று.யார் செம்புலம்?யார் பெயல் நீர்?எனக் கேட்டார் மணமகன்.தற்காலத் தவர்க்கு வாழ்வியல் நிகழ்வுகளிலேயே சந்தேகம் வரும் பொழுது இந்தச் சந்தேகமும் சரிதான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.EQUALITY தானே இன்றைய எதிர்பார்ப்பு.(பெற்றோர்க்கும் சேர்த்துத்தான்.)அப்படி இருக்கையில் யார் நிலமாய் இருப்பது,நீராய் இருப்பது.மனம்தான் ஒன்றிப் போக வேண்டும்.இல்லையா?ஐங்குறு நூற்றுப் பாடலில்,கணவனுடன் இல்லறம் நடத்தும் பெண்ணைப் பார்ப்பதற்கு,வளர்ப்புத் தாய் செல்கிறாள்.அவளிடம் அந்தப் பெண் கூறுகிறாள்.'என்பெற்றோரின் தோட்டக் கிணற்று நீர் தேனும்,பாலும் கலந்தது போன்று சுவை கொண்டது.என் கணவரின் வீட்டில் கிணறு இலைச் சருகுகள் நிறைந்து மான்கள் வாய் வைத்துக் குடித்து எஞ்சிய,கலங்கலான நீர்தான்.ஆனால் இதுதான் பெருமை யாக இருக்கிறது'என்கிறாள்.இன்றைய நிலையிலும் கூட எப்படிப் பட்டவாழ்க்கை கிடைத்தாலும் கணவனின் வீடுதான் உயர்வாகக் கருதுவது சமுதாயத்தில் ஒரு மதிப்பைத் தருகிறது.இன்றைய கால கட்டத்தில் காதல் என்ற பெயரில் பல விபரீதங்கள்,தற்கொலைகள்,கொடூரமான செயல்பாடுகள்.பெண்ணைப் பெற்றவர்கள் பயந்தே காலம் தள்ள வேண்டிய நிலை.குறிஞ்சிக் கலியில் ஒரு பாடல்.நாடகக் காட்சி போன்று.தான் விரும்பும் பெண்ணை 2,3நாட்களாகப் பார்க்க இயலவில்லை,அந்தப் பையனுக்கு.பார்க்கும் ஆவலில் வீட்டிற்குச்செல்கிறான்.உள்ளே செல்லமுடியாத வகையில் பெண்ணின் தாயும் இருக்கிறாள்.என்ன செய்வது?வாசலில் இருந்தே பருகுவதற்கு நீர் கேட்க யதார்த்தமான தாயும்,நீர் கொடுக்கச் சொல்கிறாள்,மகளிடம்.நீர்ச் சொம்புடன் கையையும் சேர்த்துப் பிடித்து விடுகிறான்.பயத்துடன் பெண் அலற,என்னவென்று உள்ளே இருந்து கேட்கும் தாய்க்கு,உண்ணுநீர் விக்கினான் என்று அவனைக் காட்டிக் கொடுக்காத அந்தப் பெண்ணைப் பார்த்து,'கொல்வான்போல் நகைக் கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்'என்று பெண் கூறுவதாக அமைந்திருக்கும் அப்பாடல்.எங்கள் ஆசிரியைகள் இதனை நடத்தும் போதும் நாங்கள் இதனை மாணவர்களுக்குக் கூறும் போதும் ஒரு கற்பனைக் காட்சியாகத் தான் நினைத்து ரசித்திருக்கிறோம்.இலக்கியச் சுவைக்கு இதுபோன்ற நிகழ்வுகள் வாழ்க்கையுடன் ஒன்றி இருப்பதனைப் பார்க்க முடிகிறது.காமம் என்ற அன்பை உணர்த்தும் சொல் இன்று வேறு பொருளைத் தருகிறது.அதுபோல் வாழ்க்கை முறைகளும்,நெறிகளும் இன்றைய நிலையில் வேறு விதமாகப் புரிந்து கொள்ளப் பட்டிருப்பதும் வேதனைக் குரியது.
arumai.. :)
ReplyDelete